இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று இளைஞர்களில் ஒருவரை நேபாள நாட்டின் போலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து மூன்று இளைஞர்கள் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய பிரச்சனை வாக்குவாதத்தில் தொடங்கி பெரிய மோதலாக மாறியது. இந்நிலையில் அந்நாட்டு போலீசார் மோதலை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற இரு இளைஞர்களில் ஒருவர் இந்தியா தப்பிச் சென்றுள்ளார்.
மற்றொரு இளைஞர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அருகில் உள்ள இந்திய – நேபாள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய போலீஸ்காரரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து இந்திய காவல் துறையினர் இந்தியா திரும்பிய இளைஞரை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும், அவரிடம் பேசியதற்கு பின்பே நடந்தது என்ன என்பது பற்றி தெரியும் என கூறியுள்ளார்.