மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் லெட்சுமணனுடன் திருப்பூர் தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து சிவக்குமாரும், லெட்சுமணனும் பெரியகுளம் அருகே உள்ள சுடுகாடு அருகே மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த லெட்சுமணன் அருகே இருந்த பிளேடை எடுத்து நண்பர் என்றும் பார்க்காமல் சிவகுமாரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதனைதொடர்ந்து சிவகுமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறனர். இதுகுறித்து தகவலறிந்த தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து லெட்சுமணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.