Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடனான கடைசி தருணம்…! பிளஸ் 2 மாணவனின் விபரீத முயற்சி… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரரான ஜெயபாலுக்கு, கோடீஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் திண்டுக்கல்லில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் பள்ளி நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது லோகேஸ்வரன் நீச்சல் தெரியாததால் கிணற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதையடுத்து நீச்சல் தெரிந்து கொள்ளலாம் என்ற முயற்சியில் கிணற்றில் இறங்கிய லோகேஸ்வரன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் உதவியுடன் மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் உடல் கிடைக்காததால் தீயணைப்பு படையினர் கிணற்றில் இருந்து நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி உடலை மீட்டனர். இதையடுத்து மாணவனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |