Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா” 8 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த வாலிபரின் சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது நண்பர்கள் 7 பேருடன் கடந்த 1-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அபாயகரமான பள்ளத்தாக்குகளை கொண்ட ரெட்ராக் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால் ராம்குமாரும், அவரது நண்பர்களும் செல்போனில் புகைப்படம் எடுப்பதற்காக ரெட்ராக் பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து செங்குத்தான பாறையின் நுனிப்பகுதியில் நின்று செல்பி எடுக்க முயன்ற ராம்குமார் எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் தவறி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ராம்குமாரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனையடுத்து மலையேற்ற குழுவினர் கடந்த 7-ஆம் தேதி அன்று சுமார் 1500 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் கிடந்த ராம்குமாரின் சடலத்தை கண்டுபிடித்தனர். ஆனால் வன விலங்குகளின் நடமாட்டத்தாலும், பனிமூட்டம் நிலவியதாலும் ராம்குமாரின் சடலத்தை மேலே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மலையேற்ற குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு ராட்சத கயிறு மூலம் ராம்குமாரின் சடலத்தை 1500 அடி பள்ளத்தில் இருந்து மேலே கொண்டு வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் ராம்குமாரின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |