மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருநீலகண்ட விநாயகர் நகரில் இன்ஜினியரான அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ஆஷிப், மற்றொறு அசோக்குமார் உள்பட 6 பேருடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு வந்துள்ளார். இதனை அடுத்து அசோக்குமார் ஆஷிப், மற்றொரு அசோக் குமார் ஆகிய 3 பேர் மட்டும் குற்றாலத்தில் இருந்து காரில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் முதலியார்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இன்ஜினியர் அசோக் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனைஅடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆஷிப் மற்றும் மற்றொரு அசோக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.