மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை காலனி தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய இரணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இரணியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் இளநீர் பறித்து குடித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுவன் தன்னை விஷ ஜந்து கடித்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இரணியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.