Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ராட்சத அலையில் சிக்கிய மாணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலில் குளிக்க சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை காமராஜர் நகரில் தியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கரைப்பேட்டையிலுள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தியாஸ் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆரிய நாட்டு தெரு துறைமுகம் பகுதி கடலில் தனது சகோதரர் ரீகன் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலை ஒன்று தியாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைக்கண்ட சகோதரர் ரீகன் மற்றும் நண்பர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்ட தியாஸை தேடியுள்ளனர். ஆனால் தியாஸ் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனவர்களுடன் சேர்ந்து கடலில் இறங்கி தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக தேடியும் தியாஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாகப்பட்டினம் கடற்கரையில் தியாஸ் சடலமாக கரை ஒதுங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியாஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |