Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சுரேஷ் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுரேஷின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அதன்பின் காவல்துறையினரின் சிறுவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |