Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…. தஞ்சையில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஐயங்கார் தெருவில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசன்னா அதே பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் கொற்கை முப்பகோவில் பகுதியில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஹரிஹரனும், பிரசன்னாவும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பொதுமக்களை உதவிக்கு அழைத்தனர். ஆனால் 2 சிறுவர்களையும் மீட்க முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசன்னா மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் 2 சிறுவர்களின் உடல்களும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |