நண்பர்களுடன் குளிக்க சென்ற வழக்கறிஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் அல்லிநகரம் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக வழக்கறிஞரான ராஜேஷ்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது குளத்தின் ஆழத்திற்கு சென்ற ராஜேஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ராஜேஷ்குமாரை மீட்டுள்ளனர்.
பின்னர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ராஜேஷ்குமாரை அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.