Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தென்காசியில் நடந்த சோகம்…!!

சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் சீனிப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய சதீஷ்குமார்   என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  சதீஷ்குமார் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும்  தனது  நண்பர்களான செல்வகணேஷ், ஆனந்தராஜ் ஆகியோருடன் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும்  போது சதீஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சதீஷ்குமாரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை இவர்களது அலறல் சத்தத்தை கேட்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த செல்லத்துரை என்பவர் கிணற்றில் குதித்து சிறுவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் சதீஷ்குமார் நீருக்குள் மூழ்கி விட்டார். எனவே ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |