Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. சென்னையில் பரபரப்பு…!!

ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருக்கும் தனியார் கல்லூரியில் அந்தமானை சேர்ந்த சாயின்ஷா என்பவர் ராணுவம் தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் தாழங்குப்பம் பகுதியில் இருக்கும் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலை சாயின்ஷாவை கடலுக்குள் இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த சாயின்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சாயின்ஷா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான அஜய் என்பவர் தனது நண்பரான அபினேஷ் என்பவருடன் ராமகிருஷ்ணன் நகர் கடற்கரையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை அஜய்யை கடலுக்குள் இழுத்து சென்றது. அதன்பின் இரவு நேரத்தில் கரை ஒதுங்கிய அஜயின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |