Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் உல்லாசம்” இளம்பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்த பல் டாக்டர்…. சென்னையில் பரபரப்பு….!!!

பல் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணையில் 30 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஷெரின் என்பவர் மூலம் பல் மருத்துவரான நிஷாந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நிஷாந்த் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி இளம்பெண்ணுடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே நிஷாந்த் வீட்டில் ஒன்றாக வாழ ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து நிஷாந்த் இளம் பெண்ணிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார். இந்த விவரம் அனைத்தும் நிஷாந்தின் தாயார் சத்யாவுக்கும் தெரியும். அதன் பிறகு திடீரென நிஷாந்த் போதை பொருளுக்கு அடிமையாகி அவருடைய நண்பர்களுடன் இளம்பெண்ணை உல்லாசமாக இருக்கும் படி கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் இளம்பெண் சேலையூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிஷாந்த், ஷெரின் ஹர்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |