சென்னை அருகேயுள்ள பொத்தேரியில் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை வள்ளுவர் தெருவில் உள்ள காந்தி நகர் என்ற பகுதியில் 35 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். அவர் குரோம்பேட்டையில் இருக்கின்ற துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் இனிக்கின்ற தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி அவரின் உடலை மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் உண்மையிலேயே ஏரியில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? இல்லை யாராவது அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார்களா? என்று விசாரணை செய்து வருகிறார்கள்.