நெல்லையில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
நெல்லை மாவட்டம் பழவூரில் லிங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதுடைய ஹரிநாத் என்ற சிறுவன் இருந்தான். இச்சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சிறுவனும் அவனது நண்பர்களான யோகேஷ், நவீன் ஆகியோரும் செட்டிக்குளத்தில் அமைந்திருக்கும் குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது லிங்கதுறையின் மகன் ஹரிநாத் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிவிட்டான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் நண்பர்கள் மீட்க முயற்சித்தும் முடியவில்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.