நடிகை திரிஷா தனது நண்பர்களுடன் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்பொழுது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கைவசம் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றது.
இந்நிலையில் பிஸியாக இருக்கும் திரிஷா வீக் எண்டில் தனது நண்பர்களுடன் பொழுதை கழித்து வருகின்றார். அந்த வகையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை தனது பெண் தோழிகளுடன் ஜாலியாக அலப்பறை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரே சோபாவில் நான் பேர் கண்டுபிடித்து அட்ராசிட்டி செய்கின்றார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை கூறி வருகின்றார்கள்.
https://www.instagram.com/reel/Ch1qcTPpYnq/?utm_source=ig_embed&ig_rid=17251657-ba63-4cb5-8409-28289875eeb8