நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த ஜெரி என்பவரின் மகன் ஜெட்டா. இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்திருக்கின்றார். ஜெட்டா தனது நண்பர்களுடன் ஒரு கல்லூரியில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சென்றிருக்கின்றார். அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் மயங்கி விழுந்திருக்யிருக்கின்றார்.
இதை பார்த்த அவரின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீஸார் ஜெட்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.