Categories
கேரளா மாநிலம்

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர்கள்… ஆற்றில் மூழ்கி பலி… திருவனந்தபுரம் அருகே நேர்ந்த சோகம்..!!

திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற  2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளாடு பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் சூர்யா வயது (14) அக்ஷய கிருஷ்ணா வயது (14), இவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை சூர்யா ,அக்ஷய கிருஷ்ணா ஆகிய இருவரும்  தங்களின் நண்பர்கள் 2 பேரை அழைத்துக்கொண்டு, வில்லியனூரில் உள் கோணம் என்ற இடத்தில் கரமனை ஆற்றில் குளிக்க சென்றனர் .முதலில் அக்ஷய் கிருஷ்ணா குளிக்க  ஆற்றினுள் சென்றுள்ளார் .அப்போது அவர் நீரில்  வேகமாக அடித்து செல்லப்பட்டார் .இதனை பார்த்த அவரது நண்பர் சூர்யா அட்சய கிருஷ்ணாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆற்றினுள் குதித்தார் . சூரியாவும் ஆற்றுநீரில் பரிதாபமாக அடித்துச் செல்லப்பட்டார் .

இதனை கண்ட  அவர்களது இரண்டு நண்பர்கள் அலறி உள்ளனர் .அவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரில் அடித்துச் சென்ற 2 சிறுவர்களையும்  தேடினர். ஆனால் அந்த 2 சிறுவர்களையும்  சடலங்கள் ஆகவே மீட்கப்பட்டனர் . இதுகுறித்து காவலர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மாணவர்களின்  சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர் .பள்ளி மாணவர்கள் இருவரும் குளிக்க சென்று ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |