Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற கல்லூரி மாணவர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கப்பகவுண்டன் வலசை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபினேஷ்(19)கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று மாலை அபினேஷ் தனது நண்பர்களான அசோக்குமார், சதீஷ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேருடன் நங்காஞ்சி ஆற்று தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபினேஷ் தடுப்பணையின் தண்ணீரில் விழுந்து தத்தளித்ததால் அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர்.

அதற்குள் அபினேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அபினேஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |