சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கி விட்டான். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
இதனை அடுத்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.