வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் நேற்று கரை ஒதுங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வா.பாளையம் மஞ்சாலம்மன் கோவில் தெருவில் அங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி லோகேஷ் தனது நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று காலை மரகதபுரம் தென்பெண்ணை ஆற்று கரையோரம் லொகேஷின் உடல் ஒதுங்கியது. இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று லோகேஷின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.