கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோதண்டகிரி விரிவு பகுதியில் தனுஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது நண்பர்கள் 16 பேருடன் கண்ணகி சிலைக்கு பின்புறம் இருக்கும் மெரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலை தனுஷையும், அவரது நண்பரான ஆகாஷ் என்பவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த ஆகாஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனுஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.