பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் நெடுமறம் விருசுளியாற்றின் பாலத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர் தனது நண்பர்களான விக்னேஷ், மாரியப்பன், ராம்குமார், அருள் ஆகியோருடன் சேர்ந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி ஆற்றில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.