Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழேந்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் பெரியாயி கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புகழேந்தியை விட்டுவிட்டு நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் புகழேந்தி மட்டும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் புகழேந்தியை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது புகழேந்தி ஒரு குளத்தில் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அரகண்டநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் புகழேந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |