Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திவிட்டு…. அசைவ உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எஸ்.ஏ காலணியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாவிஷ்ணுவின் நண்பர் ராம்குமாருக்கு பிறந்தநாள். இதனால் மகாவிஷ்ணு தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவிற்கு சென்று மது அருந்தியுள்ளார். இதனையடுத்து மகாவிஷ்ணு சென்னை ரெட்டேரி 200 அடி சாலையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த தூங்கிய மகாவிஷ்ணு நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகாவிஷ்ணுவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் மகாவிஷ்ணு இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Categories

Tech |