சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10-வது தெருவில் ரவுடியான ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தேசிங்கு(30), காசிமேடு ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த குகன்(27) ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன் ஏலம் விடும் இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ராஜா மயங்கி கிடப்பதாக குகனும், தேசிங்குவும் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது ராஜா இறந்து கிடந்தார். அவரது உடலில் சில சிராய்ப்பு காயங்கள் இருந்தது. இதனையடுத்து போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மர்மமான முறையில் ராஜா இறந்த சம்பவம் தொடர்பாக தேசிங்கு, குகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.