ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் பரத்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பரத்குமார் தனது நண்பர்களுடன் புழல் ஏரி ஆலமரம் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி பரத்குமார் ஏரியில் தவறி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பரத்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடந்த 3 நாட்களாக பரத்குமாரின் உடலை தேடி வந்தனர். நேற்று மாலை ஏரியில் கரை ஒதுங்கிய பரத்குமாரின் உடலை செங்குன்றம் போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.