Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 10-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற 10-ஆம்  வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது  நண்பர்களான சந்தோஷ், கார்த்திக் என்பவர்களுடன் சேர்ந்து ராவத்தநல்லூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் எதிரே வந்த பேருந்தின் மீது மோதியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை பெரியசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |