ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் நரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கல்லூரியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் புறநகர் மின்சார ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் நரேஷ் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அழிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நரேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.