உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தில், மணமகன் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், மணமகள் கண்ணாஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர், இருவரும் முதுகலை பட்டதாரிகள். கடந்த வெள்ளிக்கிழமை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரிய திருமண விழாவிற்காக பரேலிக்கு வந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் மணமகனின் சில நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாடுமாறு மேடைக்கு அழைத்துசென்றனர், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பரபரப்பான வாக்குவாதம் உருவானது.
இதைத் தொடர்ந்து திருமணத்தை ரத்து செய்துவிட்டு, மணமகள் தனது வீட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்தார். பின்னர் மணமகளின் குடும்பம் மணமகனின் குடும்பத்திற்கு எதிராக வரதட்சணை புகார் அளித்தது.
இதனையடுத்து மணமகனின் குடும்பம் மணமகளின் குடும்பத்திற்கு திருமண செலவான ரூ 6.5 லட்சம் செலுத்த ஒப்புக் கொண்டதையடுத்து இரு தரப்பினரும் வழக்கு ஏதுமின்றி பிரச்னையை முடித்துக்கொண்டனர். ஏனெனில், இது இரண்டு குடும்பங்களுக்கிடையிலான பிரச்சினை என்பதால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.
இதனிடையே, மணமகனின் குடும்பம் திருமணத்தை மீண்டும் நடத்த மணமகளின் குடும்பத்தை சமாதானப்படுத்த முயன்றது, ஆனால் அது பயனில்லை. ஏனெனில் மணமகள் தனக்கு ஏற்பட்ட “மோசமான அனுபவம் ” காரணமாக திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
சுய மரியாதை என்று வரும்போது, பெண்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை.