காணாமல் போன கல்லூரி மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(20) விடுதியில் தங்கியிருந்து குலசேகரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவர் விடுதிக்கு திரும்ப வரவில்லை.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சதீஷ்குமாரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் சதீஷ்குமாரின் தந்தை குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.