திருமணத்தின்போது திருமண மண்டபத்தில் கொலை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வரும் 28 வயதான நபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதையடுத்து அங்கு வந்த மாப்பிளையின் நண்பர்களுக்கு மாடியில் மது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த விருந்துக்கு வந்த டிங்கு மற்றும் தீபக் என்ற நபர் இருவரும் மது போதையில் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு மது பாட்டிலை உடைத்து தீபக், டிங்குவை கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சம்பவத்தை பார்த்த மணமகன் பெரும் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கும், அவரது சகோதரனுக்கும் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர், தம்பியின் கொடூர கொலை குறித்து காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் திருமண மண்டபத்தில் பிணமாக கிடந்த டிங்குவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது.