ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
Happy friendship day to you all ❤️🤗 pic.twitter.com/d6tXPCFNpO
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 1, 2021
மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சதீஷ், கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று நண்பர்கள் தினம் என்பதால் பிரண்ட்ஷிப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த கலக்கலான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.