Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்கள் மீது நம்பிக்கை….. சிறுவனுக்கு நடந்த விபரீதம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்வெலியில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(17) என்ற மகன் இருந்துள்ளார். 10-ஆம் வகுப்பு வரை படித்த அருண்குமார், ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் அருண்குமார் பட்டி போட்டுள்ளார். மேலும் நாய் தொந்தரவுகளை கட்டுப்படுத்துவதற்காக அருண்குமாரும், அவரது நண்பர்களும் மின்சார வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற அருண்குமார் தனது நண்பர்கள் மின்சாரத்தை துண்டித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதன் மீது கை வைத்துள்ளார். ஆனால் இரவில் செலுத்தப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை மீட்டு ஜெயம்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |