Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நண்பர் கொலைக்கு பழிக்கு பழி…. போலீஸ் ஸ்டேஷன் அருகே அரங்கேறிய இரட்டை கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பழிக்கு பழி வாங்குவதற்காக இரட்டை கொலை அரங்கேறியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே மணிமங்கலம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான ரவுடி ஆவார். இவர் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அன்சாரி, சுதாகர், சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட தேவேந்திரனின் நண்பர்கள் மணிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்த சுரேந்தர் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் விரட்டி விரட்டி அரிவாள் மற்றும் கத்தியால் கொடூரமான முறையில் வெட்டினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விக்னேஷ் மற்றும் சுரேந்தர் ஆகிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அழிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்னேஷ் மற்றும் சுரேந்தர் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டதில், டில்லி பாபு, லோகேஸ்வரன், புஷ்பராஜ் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேவேந்திரன் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக 2 பேரையும் கொலை செய்ததாக கூறியுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்ததோடு, வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |