Categories
மாநில செய்திகள்

நண்பர் விவேக்கின் உடல்நலம் தேறி…. கலைப்பணி தொடர விழைகிறேன் – கி.வீரமணி…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 8000 நெருங்கியுள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார்.

மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாறும் வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் விவேக் மீண்டும் குணமடைந்து வரவேண்டும் என்று பலரும் பிரார்த்தித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர் விவேக் அவர்கள் உடல்நலம் தேறி மீண்டும் தம் தனித்துவமான கலைப் பணியைத் தொடர்ந்திட வேண்டுமென விழைகிறோம் என்று கி வீரமணி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |