Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியாண்டி(19) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முனியாண்டியும், திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 3-ஆம் தேதி முனியாண்டி சிறுமியை கோவையில் இருக்கும் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை நேற்று அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முனியாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |