லண்டன் தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன் தவறி விழுந்த சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் தேம்ஸ் நதியில் வழியாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பள்ளி சென்ற மாணவன் பாலத்திலிருந்து நதியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பாலத்திலிருந்து நதியின் விழுந்துவிட்டார். இந்நிலையில் சிறுவனின் சத்தம் கேட்டு பெண் ஒருவர் குதித்து தேடிய நிலையில் சிறுவனை மீட்க முடியவில்லை.அவனின் பள்ளி மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் ஒரு வார காலமாக காவல்துறையினர் காணாமல் போனதாக பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி சுரங்கம் அருகே ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது சிறுவனின் உடல் தானா என உறுதி செய்யவில்லை. இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் உறுதி செய்ய நிலையில் சிறுவனின் உடல் என்பது தெரியவந்துள்ளது.