திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சில தினங்களுக்கு முன்பு மாசித்திருவிழா நடைபெற்றது. இந்த மாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி கோவிலில் உள்ள வளாகத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன், துணை ஆணையர் அனிதா, வங்கி அலுவலர்கள், கோவில் பூசாரிகள், எழுத்தர் முனியாண்டி மற்றும் சுய உதவிக்குழுவினர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த உண்டியல் காணிக்கை மூலம் 20 கிராம் தங்கமும், ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 119-ம் ,105 கிராமில் வெள்ளியும் வருவாயாக கிடைத்துள்ளது.