Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி…. எத்தனை வாக்குகள் வித்தியாசம் தெரியுமா..?

நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. ஆரம்பம் முதலே மேற்குவங்கத்தில் முன்னிலை வகித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது 214 பகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது.

இதைத்தொடர்ந்து நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே பின்னடைவில் இருந்து வந்தார். இதையடுத்து கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது 1200 வாக்குகள் வித்யாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |