மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வின் ‘சுவேந்து அதிகாரி’யின் சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அவரிடம் 1600 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் மேற்கு வங்க நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியைவிட சில ஆயிரம் வாக்குகள் தொடர்ந்து பின் தங்கிவந்தார்.
முடிவில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வின் ‘சுவேந்து அதிகாரி’யின் சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அவரிடம் 1600 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 292 தொகுதிகளில் 214 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுவரும் நிலையில் மூன்றாவது முறையாக மம்தா முதல்வராகும் வாய்ப்பு இருக்கும்போது, அவர் போட்டியிட்ட தொகுதியிலே தோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.