Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் மாசி திருவிழா…. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா…. பக்தர்கள் தரிசனம்…!!

நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் மாசிமக பிரம்மோற்சவ விழா நடைபெறுவதுண்டு. அதேபோல் இந்த வருடமும் விக்னேஸ்வர பூஜையுடன் மாசிமக பிரம்மோற்சவ விழா சிறப்பாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்திலுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து நந்தி நாதேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றுள்ளனர்.

Categories

Tech |