விக்கிப்பீடியா நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயனாளர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த சேவையை இணையதளத்தில் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா நிறுவனம் பயனாளர்களிடம் நன்கொடை வாங்கி வருகின்றது. இதன் காரணமாக விக்கிபீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிபீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதாக கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது, “எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளைப் பின் தொடர்வதற்காக நாங்கள் நீண்ட காலமாக விக்கிபீடியா அறக்கட்டளையை ஆதரித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் கூகுள் நிறுவனம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள தொகை இதுவரை வெளியாகவில்லை.