நடிகர் சிம்பு கர்நாடகாவில் உள்ள முருதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து சிம்பு நதிகளிலே நீராடும் சூரியன், பத்து தல ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார்.
Nandri Iraiva 🙏🏻#OmNamahShivaya #Atman #SilambarasanTR pic.twitter.com/WxU4b5KLhN
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2021
மேலும் நடிகர் சிம்பு ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள முருதீஸ்வரர் கோவிலில் சிம்பு சாமி தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள சிவன் சிலை முன்பு சாமி தரிசனம் செய்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.