Categories
அரசியல்

நன்றி கெட்ட இலங்கை அரசு…!!ஒருபோதும் நம்பாதீர்கள்…!! பாமக நிறுவனர் ராமதாஸ் சாடல்….!!

இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்களின் படகை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டுப் படகுகள் உட்பட 105 படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி, அதனை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் படகுகளை தனது நாட்டில் ஏலம் விட முயற்சி செய்து வரும் இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.! சமீபத்தில் இலங்கை இந்தியாவிடம் இருந்து ரூபாய் 18 ஆயிரத்து 90 கோடி கடனாக பெற்றுள்ளது. கடன் வாங்கிய கையில் ஈரம் கூட காயவில்லை அதற்குள் எந்த நன்றி விசுவாசமும் இல்லாமல் தமிழக மீனவர்களின் படகை ஏலம் விடும் முயற்சியில் இறங்கியுள்ளது இலங்கை அரசு.

முதலில் இலங்கையின் உண்மை முகத்தை இந்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் இலங்கையை நம்ப கூடாது என்பதை மத்திய அரசுக்கு திட்டவட்டமாக மாநில அரசு புரியவைக்க வேண்டும். மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டால் அவர்களின் படகுகளையும் ஒப்படைத்து விடுவோம் என இலங்கை அரசு கூறியிருந்தது. ஆனால் அவ்வாறு செய்யாமல் தற்போது படகுகளை ஏலம் விடும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு விஷயமாகும்.!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |