தாய்லாந்தில் யானை ஒன்று கால்நடை மருத்துவரிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டுள்ள ஆச்சரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தாய்லாந்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பட்டரேபோல் மனீயன். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிள்ளை தங் (31 வயது) என்ற யானைக்கு பல மாதங்கள் சிகிச்சை அளித்துள்ளார். மேலும் அந்த யானை குணமடைந்த பின்னர் அதனை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வேலையின் காரணமாக காட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது தொலைவில் நின்றுகொண்டிருந்த அந்த யானை மருத்துவரை அடையாளம் கண்டுபிடித்து சத்தமாக பிளிறியுள்ளது.
இதனையடுத்து யானையின் பிளிறல் சத்தத்தை புரிந்து கொண்ட மருத்துவர் அதன் அருகே சென்றுள்ளார். அதன் பின்னர் அந்த யானை மருத்துவரின் முன்பு தும்பிக்கையை நீட்டி வணக்கம் சொல்லியுள்ளது. உடனே மருத்துவரும் அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக அதன் துதிக்கையை கைநீட்டி தொடுகின்றார். இவ்வாறாக கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக யானை ஒன்று மனிதனிடம் அன்பை பகிர்ந்து கொண்டு ஒரு ஆச்சரியம் நிகழ்வு நடைபெற்றுள்ளது.