நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் தாயார் காலமானதையொட்டி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இடத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனையடுத்து முதலமைச்சர் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், “நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்தார்.