பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் இழிவாக படத்தை காட்டியதற்காக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதில் தற்போது பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் உள்ள பள்ளியில் சாமுவேல் பாட்டி என்ற ஆசிரியர் வகுப்பறையில் தனது மாணவர்களிடம் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை இழிவாக காட்டியுள்ளார். அதனால் ஆசிரியரை 18 வயதான அப்துல்லாஹ் அன்ஸ்ஓரோவ் என்ற இளைஞன் கொன்றதால் இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர். 13 வயது பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் பாட்டி வகுப்பறையில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை காட்டும்போது முஸ்லீம்களை வெளியேற சொன்னதாக அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவியின் தந்தை சட்டப்படி புகார் அளித்துள்ளார் . மேலும் இணையதளத்தில் அவரைப்பற்றி பெரும் பிரச்சாரங்கள் வெளிவந்தது. இதனையடுத்து பாட்டி கொல்லப்பட்டதற்கும் அந்த பிரச்சாரத்திற்கும் தொடர்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறினார்கள். இதனை அடுத்து பள்ளி மாணவி மீது அவதூறு குற்றம்சாட்டும் அவரது தந்தை மற்றும் இஸ்லாமிய போதகர்கள் மீது கொலைக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது பள்ளி மாணவி தான் ஆசிரியரை பற்றி பொய்யான கூற்று பரப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு காரணம் உடன் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாக பேசுமாறு கேட்டுக்கொண்டதால் இந்த பிரச்னையில் சிக்கிருப்பதாக அவரது வழக்கறிஞர் Mbeko Tabula கூறியுள்ளார் .