நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதை கண்டித்து தமுமுகவினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நபிகள் நாயகம் பற்றி தவறாக பேசியதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகத்தை தவறாக பேசியதற்காக தமுமுகவினர் பல்லடம் தபால் நிலையம் முன்பாக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் தபால் நிலையம் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டது.
தமுமுகவினர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து தமுமுகவினர் பல்லடம்-மங்களம் இடையேயான சாலையில் மறியலில் ஈடுபட முயன்றார்கள். பின் போலீஸார் அவர்களை சமாதானம் செய்து சாலை ஓரமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி தந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டன.