தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங்(45) ஆவார். இவர் இஸ்லாமிய மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பல வழக்குகளில் மாட்டியிருக்கிறார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் மேடை நகைச்சுவை கலைஞர் முனைவர் பரூக்கி நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியை விமர்சித்து நபிகள் நாயகத்தை குறிப்பிட்டு ஒரு வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். இவரது சர்ச்சை கருத்துக்கான ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அவரை கைது செய்யுமாறு கோரிக்கைகள் வலுத்தது அதனை தொடர்ந்து ராஜா சிங்கை போலீசார் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் நபிகள் நாயகம் இது சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் எம்எல்ஏ ராஜா சிங்கை பாஜகவில் இருந்து இடநீக்கம் செய்து கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சூழலில் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ விற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பாஜகவை சேர்ந்த எம்எல்ஏவின் கருத்து பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளையும் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் கடுமையாக காயப்படுத்தி இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக பாஜக தலைவர்கள் இந்து கருத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்எல்ஏ விற்கு எதிராக எடுக்கப்பட்ட இடநீக்க நடவடிக்கை இந்தியா மற்றும் உலகம் எங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வலியையும் வேதனையும் தனிப்பதாக இல்லை என கூறியுள்ளது.